வாங்க வேண்டியவை:
1) காதோல கருகமணி
2) 81No. பஞ்சு முத்து மாலை
3) நோன்பு கயிறு
4) வெற்றிலை
5) களி பாக்கு
6) வாழைப்பழம் 1 dozen
7) நுணி இலை
8) தேங்காய்
9) பூமாலை & உதிரி பூ
10) வெல்லம்
11) ஐவகை பழம் (3 each or choose acc)
12) பன்னீர்
செய்ய வேண்டியவை:
1) மஞ்சள் பிள்ளையார் பிடித்து அவர் முன் வெற்றிலை பாக்கு, தாம்பூலம் , 1, வாழைப்பழம் (2), வைக்கவும்
2) காயின் வடிவில் 9 பஞ்சை மஞ்சள் நீரில் நனைத்து வைக்கவும். இதில் ஒன்றை அம்மன் முகத்தில் ஒட்டவும், மற்ற 8 கலச சொம்பில் ஒட்டவும்.
9 வெற்றிலை, 9 களி பாக்கு, 9 உருட்டல் மஞ்சள் / மஞ்சளில் 9 சிறிய உருண்டைகள் ஒன்றாக வைத்து அம்மன் முன் வைக்கவும்.
3) வெள்ளை நூல் கண்டில் மஞ்சள் பூசி கலசத்தில் சுற்றவும்.
நொந்ம்பு கயிற்றில் 9 முடிச்சு போடவும்.
4) மணைப்பலகை வைத்து அதில் வாழையிலை போடவும்.
5) இதன் மேல் 1 கப் அரிசி போடவும். இதன் மேல் கலச சொம்பை வைக்கவும்.
கலசத்தில் நீர் நிரப்பி பனீர் ஊற்றவும்.
6) பின் தேங்காயில் மஞ்சள் பூசி சுற்றி 5 குங்கும போட்டு வைத்து கலசத்தில் குடுமி மேல் பக்கமாக இருக்குமாறு வைக்கவும்.
7) இதில் அம்மன் முகம் சொருகவும்.
8) மாவிலை கொத்து ஒன்று சொருகவும்
9) பின்னர் சிகப்பு நிற blouse பிட் போடவும்.
10) மாலைகள் போட்டு அலங்கரிக்கவும் .
அம்மன் முன்பு 9 பத்மம் கோலம் போடவும்.
11)9 குச்சியில் பஞ்சு சொருகி நெயில் நனைத்து வைக்கவும்
12) பூஜைக்கு அட்ச தை வைத்துக்கொள்ளவும்
13)உதிரி பூக்களால் அர்ச்சனை செய்யவும்.
அம்மனுக்கு படைக்க:
1) சர்க்கரை பொங்கல்
2) உளுந்து வடை
3) இட்லி N சட்னி
சாயுங்காலம் படைக்க:
1) சுண்டல்.
மற்றவை:
1) வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கவும்.
2) இரவு அம்மாக்கு திருஷ்டி சுற்றி மனையை லேசாக நகர்த்தி விடவும்
3) மறுநாள் இலையில் உள்ள அரிசியில் சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடவும்.
No comments:
Post a Comment